×

கடலில் பிளாஸ்டிக், ரசாயனம் கலப்பதை தடுக்க விழிப்புணர்வு படகு பயணம்

கடலில் பிளாஸ்டிக், ரசாயனம் கலப்பதை தடுக்க விழிப்புணர்வு படகு பயணம்திருக்கழுக்குன்றம்: கடலில் பிளாஸ்டிக் பொருட்கள், ரசாயன கழிவுகள் கலப்பதை தடுக்க வலியுறுத்தி விழிப்புணர்வு படகு பயணம் நடைபெற்றது. கடலில் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் கடலில் கலக்கும் ரசாயன கழிவுகளை தடுக்கும் வகையில், சென்னை மெரினா கடற்கரை பகுதியில் இயங்கி வரும் ‘எஸ்யுபி மெரினா கிளப்’ என்ற அமைப்பின் சார்பில் கடலில் விழிப்புணர்வு படகு பயணம் நடைபெறுகிறது. நேற்று முன்தினம் காலை புதுச்சேரியிலிருந்து தொடங்கிய இந்த கடல் பயணம் நாளை வரை கடல் மார்க்கமாக ஆந்திரா மாநிலம் நெல்லூர் வரை சுமார் 350 கிலோ மீட்டர் செல்கின்றது. இதில், கிளப்பின் நிர்வாகி சதீஸ்குமார் தலைமையில் 7 படகுகளில் 7 பேர் இந்த விழிப்புணர்வு பிரசார பயணத்தை மேற்கொண்டனர்.

இந்த பிரசாரத்தின்போது, வாழ்வியலில் முக்கிய ஆதாரங்களில் ஒன்றாக விளங்கி வரும் கடலில் சமீப காலமாக அதிகளவு பிளாஸ்டிக் பொருட்கள், அதாவது கடலில் பயணிப்பவர்கள் பயன்படுத்தி தூக்கி வீசும் வாட்டர் பாட்டில் மற்றும் கூல்டிரிங்க்ஸ் பாட்டில் ஆகியவை மற்றும் கடலில் கலக்கும் ஆற்று நீர் வழியாக அசுத்தங்கள் சேர்வது, தொழிற்சாலைகளின் ரசாயனம் கலப்பது போன்றவைகளால் கடல்நீர் மாசு படுவதுடன், கடலில் வாழும் மீன், நண்டு, இறால் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்களும் பாதிக்கப்படுகிறது. இதனை உணவாக உட்கொள்கின்ற மனிதர்களுக்கும் பல நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். இதையெல்லாம் தடுப்பதற்காகவே இந்த விழிப்புணர்வு படகு பயணம் மேற்கொள்ளப்படுகிறது என்று பயணம் மேற்கொன்டவர்கள் தெரிவித்தனர்.

The post கடலில் பிளாஸ்டிக், ரசாயனம் கலப்பதை தடுக்க விழிப்புணர்வு படகு பயணம் appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED வீட்டை இப்படி சுத்தம் செய்யலாம்!